Sudharshini / 2015 நவம்பர் 19 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச, எம்.செல்வராஜா
மொனராகலை மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகள் இருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய ஆசிரியரை பசறை பொலிஸார் புதன்கிழமை (18) கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மொனராகலை மாவட்டத்திலுள்ள பாடசாலையில் பணியாற்றி வந்த ஆசிரியர், மாணவி ஒருவருக்கு அலைப்பேசி வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், குறித்த மாணவிக்கு உணர்வை தூண்டும் வகையிலான ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளதோடு அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதேவேளை, அதே பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்விக்கற்று வந்த மாணவி ஒருவர், ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் பாடசாலையை விட்டு இடைவிலகி சென்றுள்ளார்.
எனினும், திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அம்மாணவி மீண்டும் பாடசாலைக்கு வந்துள்ளார். குறித்த ஆசிரியர், இம்மாணவிக்கும் அலைபேசி வாங்கி கொடுத்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் மாணவர்களிடம் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளது. இதன்போது மேற்படி மாணவிகள் இருவரிடமும் இருந்து அலைபேசிகள் கைப்பற்றப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளன.
இதன்போதே, குறித்த ஆசிரியர் இரண்டு மாணவிகளுக்கும் இவ்வாறு உணர்வை தூண்டும் வகையிலான ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பெற்றோரும் பாடசாலை நிர்வாகமும் மேற்படி ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கோரிக்கை விடுத்தனர்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பணிப்புரைக்கமைய குறித்த ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்;.
11 minute ago
15 minute ago
21 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
21 minute ago
39 minute ago