2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மாத்தளை நகரில் புதிய போக்குவரத்து திட்டம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை நகரில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மாத்தளை பொலிஸாரும் மாத்தளை மாநகர சபையும் இணைந்து, புதிய போக்குவரத்து திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளன.

இத்திட்டத்துக்கு அமைவாக, மாத்தளை நகரில் ஒரு வழிப்பாதையாக காணப்பட்ட குமார வீதியானது, இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 

அத்துடன், கண்டியிலிருந்து தம்புள்ளைக்கு பயணிக்கும் வாகனங்கள், தபால் நிலையத்துக்கு அருகிலுள்ள வீதி அல்லது ரஜ வீதி வழியாக பயணத்தை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தம்புள்ளையிலிருந்து மாத்தளைக்கு பயணிக்கும் வாகனங்கள், மந்தண்டாவல பத்தினி ஆலயத்துக்கு அருகிலுள்ள பிரதான வீதியினூடாக பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .