2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

யட்டியந்தொட்ட விவகாரம்; ஒருவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

யட்டியந்தொட்ட  கனேபொல தோட்டத்தில், நேற்று (19) இரவு ஏற்பட்ட இன முறுகல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, யட்டியந்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மேற்படித் தோட்டத்துக்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலர், தோட்ட மக்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்றுக் கேட்டு அந்த மக்கள் மீதுத் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றாமன சூழல் ஏற்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .