2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

லிந்துலையில் பிரஜா பொலிஸ் நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

லிந்துலை சரஸ்வதி தமிழ் மாகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், நேற்று (08) மாலை 4.00 மணியளவில், லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், பிரஜா பொலிஸ் நிகழ்வு நடைபெற்றது.

லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பாளர்களுக்கு பிரஜா பொலிஸ் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் லிந்துலை பொலிஸ் நிலையத்திலுள்ள சில உயர் அதிகாரிகளைக் கௌரவிக்கும் முகமாக நினைவு சின்னங்களும் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அதிகாரி, சிவில் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி திரு.சுந்தர்ராஜன், சிவில் பாதுகாப்புக்கு குழுக்கள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .