Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
பலாங்கொடையில், நேற்று (18) மாலை இடம்பெற்ற லொறி விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை நகரை அண்மித்து அமைந்துள்ள விகாரையொன்றுக்கு, பலகைகளை ஏற்றிச் சென்ற லொறியோ, பள்ளத்தில் குடைசாயந்து, வீடொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில், பலாங்கொடையைச் சேர்ந்த உ.சுகத்குமார (வயது 35), ஜோதிபால (வயது 55) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விகாரைக்குச் செல்லும் வீதியானது, குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் பயணிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்களும் அடிக்கடி பழுதாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே, மேற்படி விபத்தும் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீதியைப் புனரமைக்க முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025