2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வருடாந்த திருவிழா தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று(28) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஆலயத்தின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.எச்.எம்.மீகஸ்முல்ல, நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் இரா.பாலகிருஸ்ணன், பொலிஸ் அதிகாரிகள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.  

ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் 19 முதல் 22  வரை ஆலயத்தின் தலைவரும்   இராஜாங்க கல்வி அமைச்சருமான வி.இராதாகிருஷ்;ணன் தலைமையில் நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னாயத்தங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .