2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வேண்டுகோளை ஏற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி: ஜீவர்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதோடு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்;துக்களை தெரிவித்துகொள்வதாக கழகத்தின் நிறைவேற்று செயலாளர் ஜீவர் இராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,    

'மலையக அரசியல்; விழிப்புணர்வு கழகம், சமூகம் சார்ந்த பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இந்த தேர்தலில் மலையக மக்கள், தனிமனித அதிகாரத்துக்கு எதிராகவும் கூட்டமைப்பு கலாச்சாரத்துக்க ஆதரவாகவும் தங்களது வாக்கை மிக தெளிவாக பயன்படுத்தியுள்ளனர். எனவே வெற்றிபெற்றவர்கள் மக்களின் தேவைகளை இனங்கண்டு தகுந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக வெற்றி பெற்றவர்களுக்கூடாக சமூக நலன்சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்த குழுவாகவும் அவர்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் தோழனாகவும் மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் அர்ப்பணிப்புடன் செயற்படும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .