Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதுடன், பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்குவதாக மாவட்ட வைத்திய அதிகாரிகளும் வைத்தியசாலை இயக்குநர்களும் உறுதியளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்பொன்னையா தெரிவித்தார்.
மேற்படி வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், நுவரெலியாவில் இடம்பெற்றது. மத்திய மாகாண சபை செயலாளரின் ஏற்பாட்டில் மத்திய மாகாண சுகாதார திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த இக்கலந்துரையாடலில், மாகாண சபையின் உபதலைவர் ரட்ணாயக்கா, மாவட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங் பொன்னையா கலந்து கொண்டு, நுவரெலியா மாவட்டத்தில் அரச வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்கிணங்க, மாவட்ட வைத்திய அதிகாரிகளும் வைத்தியசாலை இயக்குநர்களும் அவரின் கருத்துக்களுக்கு இணங்கி நுவரெலியா மாவட்ட அரச வைத்தியாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்கள்,
'நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை, லிந்துலை, மன்ராசி, டயகம மற்றும் கோணபிட்டிய, ஐபொரஸ்ட் போன்ற பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படுகின்ற அரசாங்க வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவருகின்றன.
போதிய வைத்தியர்கள் இல்லாமை, கட்டட குறைபாடுகள், மலசலகூடமின்மை, தாதியர்கள் இன்மை, மருந்து வகைகளின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களினால் இவ்வைத்தியசாலைகளில் எமது மக்கள் நிறைவான சேவையை பெற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு அசௌகரிங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இலங்கையில் இன்று பல்வேறு விதத்தில் சுகாதார சேவை வளர்ச்சியடைந்து வருகின்றபோதிலும் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் இன்றும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்கள், கர்ப்பிணிகளை வைத்தியசாலை ஊழியர்கள் மரியாதையின்றி நடத்துகின்றனர். சிலர் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். நோயாளர்களை முறையாக கவனிக்க தவறுகின்றனர்.
இது குறித்து பல தடவைகள் மக்கள் முறைபாடு செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை பெற்று இன்று உறுப்பினர்களாக நாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். எனவே அவர்களின் தேவையறிந்து சேவை செய்ய வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago