2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்

Sudharshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, குருநாகல்; வீதி ஹேதெனியா பகுதியில், சனிக்கிழமை(12) மாலை இடம்பெற்ற விபத்தில், கண்டி, கும்புரேகமவைச் சேர்ந்த ஜீ.ஜீ.சோமரத்ன(வயது 63) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் விமானப்படை வீரரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெவிவித்தனர்.

ஹேதெனியாவில் வைத்து, வீதியை  கடக்;க முற்பட்ட மேற்படி நபர் மீது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள்; மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் போதிலும் அங்கு  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 28 வயதுடைய விமானப்படை வீரர், காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .