2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

விபத்தில் சிறுவன் பலி: நான்கு பேர் காயம்

Kogilavani   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, பூஜாப்பிட்டியவில் நேற்று(23) மாலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு சிறுவர்கள் காயமடைந்த நிலையில்  கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூஜாபிட்டியவைச் சேர்ந்த  திலின குமார என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். மேற்படி நால்வரும் நேற்று மாலை ஆற்றில் நீராடிவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்புகையிலே விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியை 16 வயது சிறுவன்  செலுத்தியுள்ளதாகவும் முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .