2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

விபத்தில் 5 பேர் படுகாயம்

Gavitha   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன் ரஞ்சித் ராஜபக்ஷ

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (01) காலை 7.30 மணியளவில், ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள கொமர்ஷல் மேபீல்ட் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றுடன் கொட்டகலையிலிருந்து ஹட்டன் குடாஓயா பகுதிக்கு சென்ற லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.

கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் ஒன்றை மேற்படி லொறி முந்திச்செல்ல முற்பட்ட போதே, குறித்த லொறி காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் லொறி முந்திச் செல்ல முற்பட்ட போது தடுமாறிய பஸ்ஸின் சாரதி, லொறி மீது மோதியுள்ளார்.

இதனால், குறித்த பஸ்ஸில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்துக்கு காரணமாக இருந்த லொறியின் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .