2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் 5 வயது சிறுவன் பலி: பெண் காயம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கேகாலை கண்டி வீதியில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், 5 வயது சிறுவன் பலியாகியுள்ளதுடன் படுகாயமடைந்த பெண்ணொருவர் கேககாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ஜீப் வண்டி, வேகக் கட்டப்பாட்டை இழந்து, பாதையோரமாக பயணித்த பெண் மற்றும் சிறுவன் மீது மோதியுள்ளதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் வானிலும் மோதியுள்ளது.

இவ்விபத்தில், காயமடைந்த பெண் மற்றும் சிறுவன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்போதிலும், சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஜுப் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .