2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வியாபாரி கடத்தல் 46 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை, நாராங்கலை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மரக்கறி வியாபாரியொருவர் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, அவரிடமிருந்து 46 ஆயிரம் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு நோக்கி, லொறியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த வர்த்தகரையே இவ்வாறு இனந்தெரியாதோர் கடத்தி தாக்கியுள்ளதாகவும் இந்தச் சம்பவம் சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்கப்பட்ட பின்னர், அவர் கட்டவளை எனும் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பதுளை அரசினர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த உரிமையாளர் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தப் பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .