Kogilavani / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
ஹஜ் யாத்திரிகர்களின் நன்மைக்கருதி, ஸ்ரீலங்கன் விமானச் சேவை, விமான பயணச் சீட்டுக்கான கட்டணத் தொகையில் விசேட சலுகை வழங்கியுள்ளதாக முன்னாள் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம்.எச்.ஏ.பாஹீம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், 'புனித ஹஜ் கடமைக்கான முதலாவது ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்; விமானம் 180 ஹஜ்ஜாஜிகளை ஏற்றிக்கொண்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை 2.15 மணி அளவில் புறப்பட்டுச் சென்றது.
இதற்காக சவூதி அரேபியா எயார் விமானமும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானமும் நேரடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இறுதி ஹஜ் குழு, எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி, முஸ்லிம் சமய விவகார அமைச்சின் குழு சகிதம் புறப்படவுள்ளது' என அவர் மேலும் கூறினார்.
13 minute ago
3 hours ago
6 hours ago
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
6 hours ago
02 Nov 2025