Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் ஊடாக, துரித அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாக, இ.தொ.காவின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், 20 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளார்.
இந்நிலையில், டிசெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர், மேற்படி வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என, அமைச்சர் பணித்துள்ளதாக, ஹட்டன் - டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.
நகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்திட்டத்துக்காக, இன்று (28), சபை அமர்வு நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தனது நகரசபை ஊடாக, புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் நீண்ட காலமாக நிலவிவரும் குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பொறுத்தமான காணியொன்றை பெற்றுத்தர, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
உக்கிப் போகும் குப்பைகளைக் கொண்டு, மாட்டுத் தீவனம் தயாரிக்க முடியும் என்று இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது என்றும் எனவே, இதற்கு மக்கள், சபை உறுப்பினர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைத்தால், மாட்டுத் தீவினம் தயாரித்து, கால்நடை உற்பத்தியாளர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago