2021 மே 08, சனிக்கிழமை

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Sudharshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து மன்ராசி அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த  45வயதான நபரின் சடலத்தை ஹட்டன் பொலிஸார் இன்று (16) மீட்டுள்ளனர்.

ஹட்டன் பஸ் நிலையத்தில் ஒருவர் மயங்கி கிடப்பதாக  பயணிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, ஹட்டன் பொலிஸார் குறித்த நபரை டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர்கள், அந்நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

கொழும்பு செல்வதற்காக ஹட்டன் பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையிலே இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம்  டிக்கோயா  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X