2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஹப்புகஸ்தன்ன தமிழ் வித்தியாலய பரிசளிப்பு விழா

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சண்முகநாதன்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா ஹப்புகஸ்தன்ன தமிழ் வித்தியாலயத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா, புதன்கிழமை (27) முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேற்படி வித்தியாலய அதிபர் எஸ். ஜோதிவேல் தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் பிரதம அதிதியாகவும் கோட்டம்-3இன் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். நடராஜா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்.

விழாவில் கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வந்த மாணவர்கள் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி, பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதோடு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, பரிசளிப்பு விழா ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .