Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
ஹரியால தேர்தல் தொகுதியில், நெரிகாவ, கல்கருகால, கருவலகல்ல, எஹெட்டுகஸ்யாய, தடபலகமுவ, கோம்புவ, எலபடயாய, மீகஹஎல ஆகிய கிராமங்களை வதிவிடமாகக் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு, இன்னும் ஸ்திரமான உரித்துடையவர்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என, பிரதேச மக்கள் குற்றங்சாட்டியுள்ளனர்.
இதுவரைக்கும், தங்களுடைய இடங்களுக்கு கிடைக்கப்பெற்ற உறுதிப்பத்திரத்தை, கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அரசாங்க வங்கிக்கோ தனியார் வங்கிக்கோ சமர்ப்பித்தாலும், அதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை என்றும் அது உறுதியான காணி உரித்துடைய உறுதிப்பத்திரம் என்று கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், தங்களுடைய காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவோ, புதிய வீடுகளைக் கட்டவோ வங்களில் கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என்றும் இந்தக் காணி உறுதிகளை, தங்களது சந்ததியினருக்கு கொடுப்பதிலும் சிக்கல் காணப்படுவதாகவும் எனவே, அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago