Kogilavani / 2017 ஜூன் 12 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
அமரர் ஆசிரியர் கே.ஜீவராஜின் ஞாபகார்த்தமாக, க.பொ.த. (உ/த) கணித பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே வருடாந்தம் நடத்தப்படும் இணைந்த பாட போட்டிப் பரீட்சையில், இம்முறை, ஹட்டன் ஹைலன்ஸ் மத்தியக் கல்லூரி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.
இரண்டாம் இடத்தை, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலமும் மூன்றாம் இடத்தை கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
அமரர் ஜீவராஜின் ஆசிரியர் மாணவர் ஒன்றியமானது, கடந்த ஏழு வருடங்களாக இப்போட்டிப் பரீட்சையை நடத்தி வருகின்றது. இப்போட்டிப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் பங்குப்பற்றுகின்றன. இப் போட்டிப் பரீட்சை, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இப்போட்டியில் ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 10 மாணவர்கள் அடங்கிய குழுக்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
7 hours ago