2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கட்டுகஸ்தோட்டையில் 09 மாதங்களில் வீதி வீதிவிபத்துளில் 14 பேர் பலி

Kogilavani   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் கடந்த ஒன்பது மாதங்களில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் 14 பேர் உயிரிழந்திருப்பதுடன், 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சுஜீவ குனதிலக தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலபகுதியில்  இவ்விபத்துகள்  இடம்பெற்றுள்ளன.

சாரதியின் கவனயீனம் மற்றும் மதுபானத்தை அருந்தி விட்டு வாகனத்தை செலுத்துதல் போன்றவையே இவ்விபத்துக்கள் இடம்பெறுவதற்கு அதிகமான காரணமாகவுள்ளதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரி,  கண்டி குருநாகல் வீதி , கண்டி மாத்தளை வீதி ஆகிய இரண்டு வீதிகளிலுமே அதிகமான விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக  தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .