2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

10 ஏக்கர் காடு தீக்கிரை

Menaka Mookandi   / 2014 மார்ச் 31 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமச்சந்திரன்


நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்ட மானா புற்காடு, இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 10 ஏக்கர் வரையான காடு எரிந்து சாம்பலாகியுள்ளது.

பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீயை அணைக்க முயற்சி செய்த போதும் முயற்சி பயனளிக்காமல் காடு முலுவதும் முற்றாக எரிந்து நாசமாகியது.

இந்நிலையில் இவ்வாறான விசம செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காடுகளுக்கு தீ வைப்போரை இனங்கானும் பட்சத்தில் பிரதேச மக்கள் உடனடிப்யாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் நோட்டன் பிரிஜ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெவட்ட கெதர தெரிவித்தார்.

மேலும் மலையக பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வறட்சி காலநிலையினால் நீர்நிலைகள் வற்றி காணப்படுவதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .