2021 மார்ச் 03, புதன்கிழமை

நிறை குறைந்த பாண் தயாரித்த 11 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)

பண்டாரவளை, ஹப்புத்தளை வெலிமடை பிரதேசங்களில் பதுளை அளவை நிறுவை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறைந்த நிறையில் பாண் விற்பனை செய்த பேக்கரி உரிமையாளர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர்கள் இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவிருந்தனர். இச்சுற்றிவளைப்பு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பதுளை மாவட்ட அரச அதிபர் ரோஹன மு.கீர்த்தி திசாநாயகவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

450 கிராம் இருக்கவேண்டிய பாண்கள் 400 கிராம் அளவில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .