2025 ஜூலை 09, புதன்கிழமை

'வித்தியாசமான சத்தத்துடன் மலை சரிந்தது; 128 லயன் அறைகளில் ஒன்றுகூட இல்லை'

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இன்று காலை ஏழு மணியளவில் திடீரென பாரிய சத்தமொன்று கேட்டது. அதுவொரு வித்தியாசமான சத்தம். நான் ஓடினேன். எந்தப்பக்கம் என்று தெரியாமல் ஓடினேன். அப்படி ஓடும்போது மலை சரிந்து விழுந்தது. நான் அதில் புதையுண்டேன். என்னைக் காப்பாறிய சிலர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்' என்று கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் சிக்குண்டு உயிர்பிழைத்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்டத் தொழிலாளியான ராதா (34 வயது) கூறுகையில், 'திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் எனது இடுப்புப் பகுதி வரை மண் மூடிக்கொண்டது. எனது நான்கு பிள்ளைகளும் வேறு பக்கமொன்றில் இருந்தனர். தந்தையும் தாயும் கூட இருந்தனர். அவர்கள் தொடர்பில் தகவல் இல்லை. அவர்கள் புதையுண்டனரா என்பது பற்றி தெரியவில்லை' என அவர் குறிப்பிட்டார்.

புதையுண்டு மீட்கப்பட்டவர்களை லொறியொன்றில் வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த சாரதி இது தொடர்பில் கூறுகையில், 'வீதியொன்று தென்படவே இல்லை. மிகவும் கடினமான முறையில் மீட்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்தேன்.

சுமார் 128 லயன் அறைகளில் ஒன்றுகூட தற்போது தென்படுவதில்லை. கோயிலையும் காணவில்லை. அந்த லயன் அறைகளில் 300 அல்லது 400பேர் இருந்திருக்கக்கூடும்' என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .