2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வாழமலைத் தோட்ட தீ விபத்தில் 16 வீடுகள் சேதம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


மஸ்கெலியா, நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழமலைத்தோட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர் குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் குடியிருப்பின் 16 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் வீட்டுடமைகள் அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நல்லதண்ணி பொலிஸார், பாதுகாப்பு படையினர் மற்றும் தோட்ட பொது மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த சுமார் 60 பேர் தற்காலிகமாக தோட்ட பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை என தெரிவிக்கும் நல்லதண்ணி பொலிஸார், தீ விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .