2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மத்திய மாகாணசபைத் தேர்தலில் 1,889,557 பேர் வாக்களிக்கத் தகுதி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் செப்டெம்பர்; மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய மாகாண சபைக்கான  தேர்தலில் 1,889,557 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக மத்திய மாகாணம் அமைந்துள்ளது.

மத்திய மாகாண சபைக்கு மொத்தமாக 56 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 56 உறுப்பனர்களுக்காக 3 மாவட்டங்களிலிருந்தும் 1,517 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கண்டி மாவட்டத்திற்காக 29 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதுடன், அதற்காக 17 கட்சிகளிலிருந்தும் 8 சுயேட்சைக் குழுக்களிலிருந்தும்  800 வேட்பாளர்கள் போட்;டியிடுகின்றனர்.  மாத்தளை மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதுடன், அதற்காக 13 கட்சிகளிலிருந்தும் 7 சுயேட்சைக் குழுக்களிலிருந்தும்  280 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நுவரெலியா மாவட்டத்திலிருந்து 16 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்காக 14 கட்சகளிலிருந்தும் 9 சுயேட்சைக்  குழுக்களிலிருந்தும் 437 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X