2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

கண்டி மேயரின் மனு 14 ஆம் திகதி விசாரணைக்கு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

கண்டி மாநகரசபை மேயர் பதவியிலிருந்து  மத்திய மாகாணசபை முதலமைச்சர் நீக்கியமைக்கு எதிராக லொக்கு பண்டார அலுவிகார மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒக்டோபர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மனுதாரர் தனது மனுவில் தான் ஐ.தே.க வின் தீவிர ஆதரவாளர் எனவும் தன்னை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ( (UPFA)  ) பக்கம் இழுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை உறுதியாக எதிர்த்து நின்றதாகவும் கூறியுள்ளார்.

முதலமைச்சர்  தன்மீது தவறான முகாமைத்துவம், செயற்றிறன் இன்மை தொடர்பில் பல குற்றங்களை சுமத்தி அதற்கு காரணம் காட்டுமாறு 28.10.2008 திகதியிட்ட கடித மூலம் கேட்டிருந்தார். இதற்கு மனுதாரர் விபரமான பதிலை அனுப்பியிருந்தார். 4ஆவது பிரதிவாதியான மாகாணசபை உறுப்பினரான சுமிந்த விக்கிரமசிங்க என்பவர் ஐ.தே.க. வை விட்டு விலகி அரசாங்க கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார் என தான் நவம்பர் 2009 இல் அறிந்து கொண்டதாக மனுதாரர் கூறினார்.

4ஆவது பிரதிவாதி 27 நவம்பர் 2009 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சேர்ந்து கொண்டார். ஜனாதிபதி 02.02.2009 இல் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவித்தார்.

இதற்கு அடுத்த நாள் முதலமைச்சர் தன்னை கண்டி மேயர் பதவியிலிருந்து நீக்கும் வர்த்தமானி அறிவித்தலைச் செய்தார். மனுதாரர் தன்னை மேயர் பதவியிலிருந்து நீக்கியமை தீய எண்ணத்துடன் அரசியல் காரணமாக செய்யப்பட்டது என மனுவில் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X