2021 மார்ச் 04, வியாழக்கிழமை

20 வீடுகளுக்கான அக்கல் நாட்டல்

Kogilavani   / 2017 ஜூலை 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்

ஹட்டன் அபோட்சிலி ஆனைத்தோட்ட மக்களுக்கு, பசும் பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், 20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரம்  தலைமையில், நேற்று நடைபெற்றது.   

வீடுகள் இல்லாதவர்களுக்காக அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கு  அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீட்டில், இவ் வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் அமைச்சர் ப.திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச் செயலாளர் எஸ்.லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .