2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

டயகம ஆடலி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் பாதிப்பு

A.P.Mathan   / 2010 நவம்பர் 16 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டம் டயகம வேவெளிகுரூப் ஆடலி தோட்டப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் ஆடலி தோட்டத்திலுள்ள 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் வெள்ளநீர் புகுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வெள்ளநீரினால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களைச் சேர்ந்த 20பேர் நேற்றிரவு டயகம ஆடலி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டனர்.

டயகம பிரதேசத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் அடைமழை பெய்தபோது ஆடலி தோட்டத்துக்கு அருகிலுள்ள சிற்றோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்போது சிற்றோடைக்கு அருகிலுள்ள லயன் குடியிருப்பொன்று சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் வெள்ளநீர் வடியதொடங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் தமது குடியிருப்புக்குச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியிலுள்ள சிற்றாறை அகலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உடனடியாக விஜயம் செய்த நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .