2021 மே 06, வியாழக்கிழமை

கண்டி நகர அபிவிருத்திக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகரை அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 200 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை ஸ்ரீ ராஹுல வித்தியாலய விளையாட்டு மைதானத்தை 150 இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யும் பணியை நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பித்து வைத்த முதலமைச்சர் அதன்பின் அங்கு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'கண்டி, கொழும்பு நகர சபைகள் இருக்கின்றனவா என்று கூட தெரியாத அளவுக்கு நகரங்கள் காணப்படுகின்றன. கண்டி நகரில் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இவைகளை திருத்தி அமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய அரசாங்கத்திற்கே முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .