2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

நக்கில்ஸ் காட்டில் திடீர் தீ; 200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

நக்கில்ஸ் மலைத்தொடருக்குட்பட்ட காட்டுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்புக்குட்பட்ட காட்டுப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நக்கில்ஸ் காடு அமைந்துள்ள மலையின் உடதும்பர, கஹட்டகொல்ல பகுதியிலேயே இந்த திடீர் தீ ஏற்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த தீ, அப்பிரதேசத்தில் நிலவும் வரட்சி காலநிலை காரணமாகவும் கடும் காற்று காரணமாகவும் காட்டின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

பொலிஸார், பொதுரமக்கள் மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளில் என பல தரப்பினரும் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்டிகொண்ட போதிலும் அது பயனளிக்காத நிலையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .