Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகில் திடீர் மரண விசாரணை அதிகரிகளுக்கான பணிமனைகளை ஏற்படுத்துவதற்கு மத்திய மாகாணசுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கரப்பத்தனை ,கொட்டகலை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகள் உள்ள பிரதேசங்களில்திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவையினை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாததால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகில் திடீர் மரண விசாரணை அதிகரிகளுக்கான பணிமனைகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சருக்குக் கடிதம் மூலம் தான் அறிவித்துள்ளதாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்தார்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026