2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

காமன்கூத்துக் கலைஞர்களுக்கு பாராட்டு

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இன்று செவ்வாய்க்கிழமை நாவலப்பிட்டி தமிழ்கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது உலகதமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கு பற்றிய மலையக காமன் கூத்துக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நாவலப்பிட்டி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டாளர் அ.லெட்சுமணன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு சு.குணசீலன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கவிஞர் சு.முரளிதரன், காமன் கூத்து நெறியாளர் பிரான்சிஸ் ஹெலன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் நன்றியுரையினை த.இராஜேந்திரன் ஆற்றினார்.

தங்களுடைய அனுபவங்களையும் காமன் கூத்து தொடர்பான கருத்துக்களையும் உலக செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்ட மலையக காமன் கூத்துக் கலைஞர்கள் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--