Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பொகவந்தலாவை தோட்ட மக்களுக்கு உரியவகையில் தபால் விநியோகம் இடம் பெறாத காரணத்தினால் இந்தத்தோட்ட மக்கள் தமக்குரிய கடிதங்களைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பொகவந்தலாவைப்பிரதேச தோட்டங்கள் சிலவற்றில் மாத்திரமே தபால் ஊழியர்களால் நேரடியாக தபால் விநியோகம் இடம் பெறுகின்றது. எனினும் சிலத்தோட்டங்களில் தோட்ட நிருவாகத்தினால் நியமிக்கப்படுகின்ற ஊழியர்கள் மூலமாகவே தபால் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த நிலையில் பொகவந்தலாவைத் தோட்டத்தில் இவ்வாறு ஒரு ஊழியர் கடந்த இரண்டு வருடங்களாக நியமிக்கப்படாததால் இந்தத்தோட்ட மக்களுக்கு வருகின்ற கடிதங்கள் உரியநேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து தபால் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொகவந்தலாவைத் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .