2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி;மற்றொருவர் காயம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவின், தமாம் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில், கம்பளை, ஹிஜ்ராகமையைச் சேர்ந்த எம்.இக்பால் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் எனவும் கம்பளை - கண்டி வீதியைச் செர்ந்த எஸ்.எம்.பவாஸ் என்பவர் காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளான இரு வாகனங்களில் ஒன்று இவர்கள் மீது தூக்கி வீசப்பட்டமையினால் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று மேலும் கூறப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .