2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

குழந்தையை கைவிட்டு சென்ற தாய் விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பசறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட குழந்தையின் தாய் நேற்று 16 பசறை நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது நீதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவு பிறபித்தார். அத்தோடு குறித்த குழந்தையை பண்டாரவளை சுஜாதா  சிறுவர் நலன் காப்பு நிலையத்தில் ஒப்படைக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

பதுளை, பசறை ஆக்கரதென்ன தோட்டத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் ஜாஎல பிரதேசத்தின் ஆடை தொழிற்சாலை ஒன்றில் சேவை புரிந்து வந்த போது குறித்த குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

வீட்டாரின் எதிர்ப்பின் காரணமாக குழந்தையை பசறை 9 வது மைல் கல் அருகே அமைந்திருந்த பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிட்டு விட்டு தலைமறைவாகியிருந்தார். அதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்ட பசறை மாவட்ட நீதிமன்ற நேற்று நிறுத்தப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--