Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.தியாகு)
ராகலை நகர வர்த்தகர்களும் பொது மக்களும் இணைந்து தமக்கு கடந்த பல வருடங்களாக மயான வசதி இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நேற்று வெள்ளிக்கிழமை நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் சவப்பெட்டியுடன் வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகலை நகர வர்த்தகர்கள் அனைவரும் வர்த்தக ஸ்தாபனங்களை மூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். தமக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என அவர்கள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு இச் சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டது. அமைச்சர் உடனடியாக இரண்டு வாரத்தில் ராகலை தோட்டத்தில் இரண்டு ஏக்கர் காணியை பெற்றுத்தர உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் 2.00 மணியளவில் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
54 minute ago
1 hours ago