Super User / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கொழும்பிலிருந்து புசல்லாவை நோக்கி பஸ்ஸில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் சக பயணி வழங்கிய இனிப்பு பண்டத்தை உட்கொண்டு மயக்க முற்ற நிலையில் உடமைகளை பறிகொடுத்து விட்டு, கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரிய வருவதாவது:
கொழும்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை புசலாவைக்கு பயணம் செய்த இவர், தன் அருகில் அமர்ந்திருந்த சக பயணியுடன் உரையாடியவாறு பயணித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்த நிலையில் குறித்த குடும்பஸ்தருக்கு சக பயணி வழங்கிய இனிப்பு பொருளொன்றை உண்டுள்ளார்.
அந்த இனிப்பு பண்டத்தை உண்ட பின், குடும்பஸ்தர் மயக்கமடைந்துள்ளார். இதன் பிறகு சக பயணியாய் நடித்த நபர், குடும்பஸ்தரின் ஒன்றைப் பவுண் பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் பொருட்களையும் சுருட்டிக் கொண்டு நழுவியுள்ளார்.
பின்னர், குடும்பஸ்தர் குடிபோதையில் இருப்பதாக கருதிய பஸ் வண்டியின் சாரதி குடும்பஸ்தரை நேற்று மயக்கமடைந்த நிலையில் புசல்லாவ லவுகபிடிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகலை கம்பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
24 minute ago
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
3 hours ago