2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

புலத்தோபிட்டியவில் பெண் சடலமொன்று மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (நதீர் சரீப்தீன்)

புலத்தோப்பிட்டிய பிரதேசத்தின் வியலுபிட்டிய பகுதியில்  உள்ள வீடொன்றிலிருந்து, இறந்து மூன்று நாட்களின் பின்னர் பெண்ணொருவரின் சடலமொன்று மீட்டெடுத்துள்ளதாக புலத்தோப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலமானது 52 வயதான ஜே.லீலாவதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் வீட்டில் தனிமையாக வாழ்ந்து வருபவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சந்தேகம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புலத்தோபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .