Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர்கள் விரும்பும் கட்சியாக மாற்றமடையும். அவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி வழிநடத்த ஒருபோதும் தயங்காது என அந்தக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட இளைஞர் முன்னணியின் கூட்டமொன்று நேற்று சனிக்கிழமை உடுநுவர கெலிஓயாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:-
ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் யுவதிகளின் எண்ணங்கள் , அபிலாஷைகளை புரிந்து கொண்டு மதித்து நடக்கும் கட்சியாகும். இந்த ஜனநாயகப் பண்பை கட்சி தொடர்ந்தும் காத்து வந்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவு இளைஞர் யுவதிகளை களத்தில் இறக்கும். எனவே விரும்பியவர்கள் கட்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாட்டில் தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கிய கட்சி எமது கட்சியாகும். ஜனசவிய , ஆடைத் தொழிற்சாலை, மகாவில அபிவிருத்தி திட்டம் போன்றன மூலம் இத்தொழில வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. எனவே எம்மிடம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டங்கள் உண்டு.
நாட்டின் உற்பத்திகளை நவீனமயப்படுத்தல் மூலம் பல்வேறு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை என்றார்.
இதில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பலரும் கலந்து கெண்டனர்.
27 minute ago
29 minute ago
48 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
48 minute ago
58 minute ago