2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பேராதனை பல்கலை மாணவர்கள் பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.குவால்தீன்)

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள 4 மாணவத் தலைவர்களை விடுதலை செய்ய பேராதனை பல்கலைக்கழக நிருவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இம்மாணவர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இப்பகிஷ்கரிப்பில் மருத்துவபீட மாணவர்களைத் தவிர ஏனைய அனைத்துப்பீட மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது, அவரது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரைத் தடுத்து வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே மாணவத் தலைவர்கள் நால்வரை பேராதனைப் பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

"இம்மாணவர்களை பழிவாங்கும் நோக்கிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--