Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எஸ்.குவால்தீன்)
பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை கண்டி மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்களவை சந்தித்து தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகான உதவ வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
திமுனு செனவிரட்ன தலைமையில் ஆறு மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இன்று மாலை கண்டி மல்வத்த மகாநாயக்க தேரரைச் சந்தித்துள்ளது.
மாணவ தலைவர்கள் நால்வர் பலி வாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதாக கூறிய மாணவர் பிரதிநிதிகள் அக்கைதுக்கான பின்னணிகள் குறித்தும் மகாநாயக்க தேரருக்கு விளக்கியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த மகாநாயக்க தேரர் சம்பந்தப்பட்டவர்களுடன் சமரசமாக பேசி தீர்வு காணுமாறு கூறினார். எனினும் மாணவர்கள் பல்கலைக்கழக நிருவாகத்தினர் மீதோ, பொலிஸார் மீதோ, அரசியல்வாதிகள் மீதோ தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை தெளிவுபடுத்தினர்.
இதனையடுத்து பிரச்சினைகளை தெளிவாக எழுத்து மூலம் மகஜராக தமக்கு சமர்ப்பிக்குமாறு மாணவர்களிடம் மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago