2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கண்டியில் பங்களாதேஷ் இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(எம்.எஸ்.குவால்தீன்)

விஸா அனுமதிப் பத்திரமின்றி, சட்டவிரோதமாக கண்டி பிரதேசத்தின் வீடொன்றில் மறைந்திருந்த பங்களாதேஷைச் சேர்ந்த 10 இளைஞர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கண்டி பொலிஸ் நிலையத்தின் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து , பொலிஸார் தவுலகல, முறுத்தகஹாமுல கிராமத்தில் வீடொன்றினுள் மறைந்திருந்த நிலையில் பங்களாதேஷைச் சேர்ந்த 10 இளைஞர்களையும் வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கடந்த ஜூன் மாதம் 20 நாள் விஸா அனுமதியுடன் இலங்கைக்குள் வந்த இளைஞர்கள், விஸா காலாவதியாகியும்  நாடு திரும்பாமல் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .