2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டி கலபொட தமிழ் வித்தியாலயத்தின் நவராத்திரி விழாவும் பாராட்டு வைபவமும்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

நாவலப்பிட்டி கலபொட தமிழ் வித்தியாலத்தின் நவராத்திரி விழாவும் பாராட்டு வைபவமும் நாளை மறுதினம் 12ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலை அதிபர் வி.மோகன்ராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவின் பிரதம அதிதியாக மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜாவும் கௌரவ அதிதியாக பாஸ்பாகே கோரள பிரதேச சபை உறுப்பினர் விக்கிரமரத்ன ஜயசிங்கவும் சிறப்பு அதிதிகளாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ், கம்பளை வலய மேலதிகக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எம்.லோகநாதன் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.துரைராஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விழாவின்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் இந்தப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பாராட்டும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .