2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் யுவதி கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்துகமையிலிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும்  யுவதி ஒருவர் கண்டி புகையிரத நிலையத்தின் முன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்;.

மத்துகமையிலிருந்து வான் ஒன்றில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் 17 வயதுடைய மேற்படி யுவதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டி புகையிரத நிலையத்தின் முன் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், கடத்தலுக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும்  வானையும் கடத்தியவர்களையும் கண்டுபிடிப்பதற்காக கண்டி பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .