Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டியிலுள்ள பிரபல அரச வர்த்தக வங்கியொன்றில் முப்பது இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடுவதுடன் புலன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டியிலுள்ள பிரபல நிதி நிறுவனமொன்றின் காசோலையொன்றை களவாடி அக்காசோலை மூலம் மேற்படி 30 இலட்சம் ரூபாவை பெற்று இம் மோசடியை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இம்மோசடி சம்பந்தமாக வங்கி அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள் உட்படப் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தற்செயலாக நடந்த ஒரு மோசடியா அல்லது திட்டமிட்ட ஒரு மோசடியா என அறிவதற்கு பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை நடத்துகின்றனர்.
41 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago