2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மரத்துடன் மின்கம்பம்; அபாயத்தில் மக்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தை சேர்ந்த பொக்காவலை பிரதேசத்தில் மின் கம்பம் ஒன்றை அருகிலுள்ள மரம் ஒன்றுடன் சேர்த்து கட்டிவைத்திருப்பதனால் மின் கம்பிகள் மரத்துடன் சேர்ந்து அப்பிரதேச மக்களுக்கு அபாயகரமான நிலையை உருவாக்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கடந்த சில தினங்களாக இப்பிரதேசத்துக்கு பெய்த கடும் மழை காரணமாக உடைந்து விழுந்த மின் கம்பத்தை மின்சார வபை ஊழியர்கள் ஒரு மரத்துடன் சேர்த்து கட்டிவிட்டு சென்றதாகவும் 230 வோல்ட் சக்திவாய்ந்த மின் கம்பிகள் 10இற்கும் மேற்பட்ட மரங்களில் படுவதனால் மரங்கள் மூலம் பொது மக்களுக்கு மின்சாரம் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .