2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தாதியை வல்லுறவுக்குட்படுத்த முயன்றவர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)

 

பதுளை பிரதேச மருத்துவ தாதி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற மூன்று இளைஞர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பதுளை ஸ்பிரிங்வெலி பிரதேசத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தாதி கடமை முடிந்து வீடு திரும்பும் போது மோட்டார் சைக்களில் வந்த இளைஞர் குழு ஒன்று குறித்த மருத்துவ மாதுவை வல்லுறவுக்கு உட்படுத்த பலாத்காரம் செய்துள்ளனர்.

அதனையடுத்து குறித்த தாதி கூக்குரலிட்டு சத்தமிட்டதன் மூலம் அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

சிறு காயங்களுக்குள்ளான குறித்த தாதி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .