2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாக எஸ்.லோரன்ஸ் நியமனம்

Super User   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாக எஸ்.லோரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளததாக மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகுமார் காலஞ்சென்றதைத்அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே எஸ்.லோரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு முன்னர் கட்சியின் உபதலைவராக இவர் செயற்பட்டு வந்தார்.

அத்துடன் மலையக மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளராக எஸ்.விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் ஆரம்ப கால முக்கியஸ்தர்கள் சிலருக்கு கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் சந்திரசேகரன் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .