Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ராவின்)
உள்ளூராட்சி தேர்தல் சட்ட திருத்தத்தினால் சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித நன்மையுமில்லை. குறிப்பாக சிறுபான்மையின கட்சிகள் தமது தனித்துவத்தை இழந்து விடுவதுடன் அக்கட்சிகள் இருந்த இடம் தெரியாது போய்விடும் என்று சப்கரமுவ மாகாண சபையின் ஐ.தே.க உறுப்பினர் ஹெகியா எம்.இப்னான் கூறினார்.
இரத்தினபுரியிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடரந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் சிறுபான்மையின கட்சிகளையும் சிறுகட்சிகளையும் இல்லாததொழிக்கும் நோக்கத்துடன்தான் இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தில் சீர்த்திருத்தம் செய்யப்படுகின்றன.
அத்துடன் அதிகமான செல்வந்தர்கள் இந்த தேர்தலில் போட்டியிடும் வகையில், கட்சி சார்பாக போட்யிடும் நபர் ஒருவருக்கு தலா 5000 ரூபாவும், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவும் தேர்தல் கட்டணமாக அறவிடப்படுகின்றன. இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago