Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
புதிய உள்ளூராட்சி அரசியல் திருத்தத்தின்படி வட்டாரமுறை அமுல்படுத்துகையில் மூன்றில் இரண்டு பகுதி பிரதிநிதிகள் வட்டாரமுறையிலும் மூன்றில் ஒரு பகுதி பிரதிநிதிகள் தற்போதுள்ள விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தின் பிரதம கொரடாவும் தேசிய நீர் விநியோக நீர்பாசன அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று திங்கட்கிழமை மாலை கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக கண்டி கெபபெட்டிப்பொல மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-
வடபகுதியில் அடுத்தபோக அறுவடையை அடுத்து, 'அரிசி உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம்' என்பதை நிரூபித்துக் காட்டுவோம். வட பகுதியில் கடந்த காலங்களில் விவசாய உற்பத்தி முற்றாக ஸ்தம்பித்திருந்தது. இப்போது வடபகுதியில் உள்ள விவசாயிகள் நிம்மதியாக தமது விவசாய நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அடுத்த போகத்தை அடுத்து, பெருமளவிலான அரிசி உற்பத்தி இடம்பெறவுள்ளது. அதன்போது அரிசி உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
புதிய அரசியல் சீர்திருத்தத்தின்படி வட்டார முறை அமுல்படுத்துகையில் மூன்றில் இரண்டு பகுதி பிரதிநிதிகள் வட்டார முறையிலும் மூன்றில் ஒரு பகுதி பிரதி நிதிகள் தற்போதுள்ள விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவர். புதிய அரசியல் சீர்திருத்தத்தின் படி நேரடிப் போட்டியில் தெரிவு செய்யப்படாது பின்தள்ளப்படும் அபேட்சகர்கள் விகிதாசாரத்தில் தெரிவு செய்யப்படலாம். எனவே எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
தற்போது அமுலில் உள்ள விகிதாசார முறையில் ஓர் அபேட்சகர் கோடிக் கணக்கில் பணம் செலவழித்து பரந்து விரிந்த தனது தொகுதியில் அசுர வேகத்தில் சவாரி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு கையாட்களும் பாரிய வாகனச் செலவு என்று பல பிரச்சினைகள் உண்டு. புதியமுறையில் ஒருவர் வட்டாரத்திற்கு கால் நடையாகவே சேன்று வரையறுக்கப்பட்ட தனது ஆதரவாளர்களைச் சந்தித்துக் கொள்ள முடியும். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
8 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Oct 2025